சுற்றுலா செல்ல பிரபலமான 7 சதுப்புநில இடங்கள்
சுந்தரவன சதுப்புநில காடுகள், இந்தியா மற்றும் பங்களாதேஷ்... இது உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு; வங்காளப் புலி மற்றும் எண்ணற்ற தனித்துவமான உயிரினங்களின் தாயகம்.
புளோரிடாவிலுள்ள எவர்க்லேட்ஸ் தேசிய பூங்கா, அமெரிக்காவின் மிகப்பெரிய துணை வெப்பமண்டல வனப்பகுதியாகும். இது பறவை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக திகழ்கிறது.
போர்னியோ சதுப்புநிலங்கள், மலேசியா மற்றும் இந்தோனேசியா... புரோபோஸ்கிஸ் குரங்குகள், பிக்மி யானைகள், எஸ்டுவாரைன் முதலைகள், ஹார்ன்பில்ஸ் போன்ற பல பறவையினங்களை இங்கு காணலாம்.
இலங்கைக்கு விசிட் செய்யும் போது, சுந்தரிஜல் சதுப்புநில காட்டை உங்களின் பயணத்திட்டத்தில் சேர்க்கலாம். பசுமையுடன் கூடிய குறுகிய கால்வாய்கள் வழியாக அமைதியான படகு சவாரி வெகுவாக ஈர்க்கிறது.
அமேசான் மழைக்காடு சதுப்புநிலங்கள், தென் அமெரிக்கா... அமேசான் நதிப் படுகையில் அமைந்துள்ள இது, இயற்கை மற்றும் வனவிலங்கு பிரியர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான இடங்களில் ஒன்றாகும்.
அபுதாபி சதுப்புநிலங்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்... இங்குள்ள சதுப்புநில தேசிய பூங்கா வறண்ட சூழலுக்கு இடையே ஒரு அழகிய சுற்றுச்சூழல் சோலையாகும்.
கேன் ஜியோ சதுப்புநில காடுகள், வியட்நாம்... இங்கு மக்காக்குகள், முதலைகள் மற்றும் அரிய வகை பறவை இனங்களை கண்காணிக்க அனுமதிக்கப்படுகின்றன.