ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?
ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணி, பூச்சிகள், உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும் போது அவர்களுக்கு ஸ்க்ரப் டைப்ஸ் நோய் ஏற்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்படுவோருக்கு காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, தடிப்பு, உடல் அரிப்பு ஏற்படும்.
இவ்வாறு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கல்லீரல், சிறுநீரகங்களில் பாதிப்பை உருவாக்கும்.
மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிகளவில் நோய் பாதிப்பு ஏற்படும்.
காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் 5 முதல் 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.