ஆரோக்கியமான சிற்றுண்டி வெண் பொங்கல்!! நன்மைகள் அறிவோமா!!

வெண் பொங்கலை, 'ஹெவி' உணவாக பலரும் கருதுகின்றனர். உண்மையில், அது ஒரு ஆரோக்கியமான உணவு. மேலும் சமச்சீரான, சிறந்த காலை சிற்றுண்டியும் கூட.

அரிசியில் கார்போ ஹைட்ரேட்டும், பாசிப் பருப்பால், புரோட்டினும், மிளகு, சீரகம், பெருங்காயம் உள்ளிட்டவையால், 'மைக்ரோ நியூட்ரியன்ஸ்' சத்துகளும் கிடைக்கிறது.

மேலும் முந்திரி, இஞ்சி மற்றும் கறிவேப்பிலையால் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சத்துகளும், பசு நெய்யால் நல்ல கொழுப்பும் ஒரே உணவின் மூலம் நமக்கு கிடைக்கின்றன.

நன்கு வேக வைத்த பொங்கல், மிகவும் எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டது. வெண் பொங்கலானது, நம் உடலை குளிர்விக்கும் ஓர் உணவு என்று, யோகக் குறிப்புகள் சொல்கின்றன.

வயிற்றுப் புண்ணை ஆற்றும், குடலை சுத்தப்படுத்தும், நெஞ்செரிச்சலை சரி செய்யும். பாலுாட்டும் தாய்மார்களுக்கு, நன்கு பால் சுரக்க வைக்கும்.

வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும். வயிற்று உப்புசம், வயிற்று வலியை சரி செய்யும்.

காலையில், வெண் பொங்கல் சாப்பிடுவதால், உடலுக்கு நல்ல எனர்ஜி கிடைக்கும். தசைகள் வலுப்பெறும். குடல் பகுதியை அரிக்காமல் காக்கும். ரத்த சோகை வராமல் தடுக்கும்.