ஓவர்திங்கிங் பாடாய்படுத்துகிறதா? ஓவர்டேக் செய்ய ஐடியா இதோ !
எப்போதும், எதையாவது பற்றி யோசித்து கொண்டிருப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொல்லும்.
கடந்த காலத்தில் மூழ்கியிருப்பது அல்லது எதிர்காலம் குறித்த பயத்தால், நிகழ்கால வாழ்க்கையை முழுமையாக வாழ விடாமல், ஏதோ ஒன்று நம்மை தடுப்பது போன்றே இருக்கும்.
நச்சுத்தன்மை மனிதர்களிடம் விலகி இருங்கள்... உங்கள் மீது பொறாமை கொண்டவர்கள் அல்லது நேரம் பார்த்து சூழ்ச்சியில் வீழ்த்த நினைப்பவர்களிடம் இருந்து சிறிது விலகியிருப்பது நல்லது.
எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்... அதீத யோசனைக்கு முக்கிய காரணம், மூளையில் எண்ணங்களை உருவாக்க அனுமதிப்பது தான். இதை தவிர்க்க எண்ணங்களை வெளிப்படுத்த முயற்சிக்கவும்.
எண்ணங்களை பிரித்து கொள்ளுங்கள்... அதிகமாக யோசிக்கும்போது, கட்டுக்குள் வைக்க முடியுமென தோன்றுவதை சரி செய்ய தீவிரமாக முயற்சிக்கவும். முடியாதவை குறித்து கவலைப்பட வேண்டாம்.
கவனத்தை சரி செய்யுங்கள்... எண்ணம் போல் தான் வாழ்க்கை. நீங்கள் எதில் கவனம் செலுத்துகிறீர்களோ அதுவாகவே மாறுவீர்கள். எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தவும்.
சுறுசுறுப்பாக இருங்கள்... மனதை நகர்த்த சிறந்த வழி உடலை நகர்த்துவதாகும். தினமும் சுறுசுறுப்பாக இருக்க, ஓட்டப்பயிற்சி, எடை தூக்குதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.