இன்று திருவள்ளுவர் தினம்!

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி' இது வரலாற்றுப் பதிவு.

இச்சிறப்புப் பெற்ற தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் பெட்டகமாகத் திகழ்வது தமிழகம் தந்த வள்ளுவனால் தரணிக்குச் சொன்ன திருக்குறள்.

அறத்தை சொல்லி கொடுத்து பொருளை அள்ளிக் கொடுத்து, இன்பத்தோடு வாழ வழிகாட்டிய நுால் திருக்குறள்.

உலக மக்களின் நல்வாழ்விற்கு ஊன்றுகோலாக இருந்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

மழலை தொடங்கி நாட்டை ஆளும் மன்னன் வரைக்கும் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது என்று பாதை காட்டிய பண்பாட்டு நுால்.

ஒருவர் அவரது வாழ்க்கையில் ஒரு முறையாவது திருக்குறளை முழுமையாகப் படித்து அதன் வழி வாழ்ந்தால் நிச்சயமாக குற்றங்களும், வன்மங்களும் இல்லாத சமூதாயம் சாத்தியமாகும்.