வைட்டமின் டி குறைபாட்டை எவ்வாறு சரிசெய்வது?
மனித உடலில் செயல்பாட்டிற்கு வைட்டமின் டி முக்கியமானது. வைட்டமின் டி குறைபாடு எலும்பு, தசைகளை பாதிக்கும்.
எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியத்தை பராமரிப்பது வைட்டமின் டி பங்கு அதிகம்.
உடலில் உள்ள செல்களின் வளர்ச்சியிலும், ஹார்மோன்களின் சமநிலையை பராமரிப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை அதிகரிப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் டி குறைந்தால் தலைமுடி உதிர்தல் அதிகரிக்கும். எளிதில் சோர்வடைவோம். தசைப்பிடிப்பு மற்றும் எலும்புகளில் வலியால் பாதிக்கப்படுவோம். நினைவாற்றல் பாதிக்கப்படும்.
இவற்றை இயற்கையாகவே உணவின் மூலம் குணப்படுத்தலாம். காளான், தயிர், பசும்பால், பாதாம், ஓட்ஸ், சோயா பால், ஆரஞ்சு பழச்சாறு உள்ளிட்டவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.
தினமும் காலையில் சூரிய ஒளியில் சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.