காலை மலச்சிக்கலில் அவதியுறுபவரா நீங்கள்?
பலர் கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்து கடும் முயற்சியில் ஈடுபட்டு, தோற்றுப்போய் அவசர கதியில் அடுத்த வேலையை பார்க்கச்செல்வர்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணியாக விளங்குவது தவறான உணவுப்பழக்கம்.
சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பது மலச்சிக்கலில் இருந்து விடுபட முக்கிய தீர்வு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இரவு எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவது நல்லது.
முட்டை, மாமிசம் உள்ளிட்டவை செரிமானமாக அதிக நேரம் பிடிப்பதால், காலை மலச்சிக்கலை உண்டாக்கும்.
காலையில் காபி, டீ உள்ளிட்ட கஃபைன் பானங்களுக்கு பதிலாக, லெமன் டீ, கிரீன் டீ, வெந்நீரில் கலந்த எலுமிச்சை சாறு குடிக்கலாம்.
சரியாகத் தூங்காத இரவுகளால், நாள் முழுவதும் சோர்வு மற்றும் வயிற்று உபாதைகள் உண்டாகும்.
பரோட்டா, பப்ஸ், பிஸ்கெட் மற்றும் பிரெட் உள்ளிட்ட மைதா உணவுகள் மலச்சிக்கலை அதிகரிக்கும்.