டைபாய்டு காய்ச்சல் காரணமும் சிகிச்சை முறையும்!!
'சல்மோனெல்லா டைபி' எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால், டைபாய்டு நோய் ஏற்படுகிறது. சிறு குழந்தைகள் முதல், முதியோர் வரை, யாரையும் தாக்கும் .
முதலில் காய்ச்சல், சோர்வு, வயிற்று வலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். ஒரு சிலருக்கு உடம்பில் சிறிய சிவப்பு புள்ளிகள் ஏற்படும்.
சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் இவற்றால் டைபாய்டு ஏற்படும். பாதுகாப்பில்லாத குடிநீரை உட்கொள்வதன் மூலம் இந்த வகை காய்ச்சல்கள் வரும்.
கைகளை சுத்தம் இல்லாமல் வைத்துக் கொண்டால் இதன் மூலமும் நோய் பரவும். பெரியவர்களையும் இது பாதிக்கும். பாதிப்பை உறுதிப்படுத்த ரத்த அணுக்கள் பரிசோதனை அவசியம்.
காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் இப்பரிசோதனையைச் செய்ய வேண்டும். நீங்களாகவே மாத்திரையை வாங்காமல் மருத்துவர் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுக்கவும்.
முதல் 3 நாட்கள் மருந்து கொடுத்தாலும் டைபாய்டு காய்ச்சல் குறையாது. 4, 5 வது நாட்களில் காய்ச்சல் அதிகரிக்கும். 7 முதல் 10 நாட்கள் வரை சிகிச்சை அளிக்க வேண்டும்.
குடலில் புண் உண்டாகும் வாய்ப்பிருப்பதால், காரமான உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளான கஞ்சி, பழங்கள், பழச்சாறுகள் போன்ற வற்றை எடுத்துக் கொள்ளலாம்.
வெந்நீர் மட்டுமே பருக வேண்டும். வெளி உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சமைக்காத உணவுகளான தயிர் பச்சடி, 'சாண்ட்விச்' போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.