உடல் எடையை குறைக்க உதவும் குயினோவா!

குயினோவா ஒரு முழுமையான புரதம் கொண்ட தானியமாகும். இது குளூட்டன் ப்ரீ உணவும் கூட.

மேலும் நார்ச்சத்து, ஃபோலேட், இரும்பு, மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றிகள், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக விளங்குகிறது.

கொஞ்சமாக எடுத்துக் கொள்ளும்போதே வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதை எடுத்துக்கொள்ளலாம்.

அதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிறைய ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். அவற்றில சிலவற்றை பார்ப்போம்.

இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து உற்சாகமாகவும், திருப்தியாகவும் வைத்திருக்க உதவும்.

இதில் 9 வகையான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. ஒரு தானியம் என்றால் அது குயினோவா தான். அதுவும் 100 கிராம் சமைத்த குயினோவாவில் கிட்டதட்ட 120 கலோரிகள் இருக்கின்றன.

இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்ய உதவுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.