ப்ரோக்கோலியில் அப்படி என்ன இருக்கு? புற்றுநோய் வராமல் தடுக்குமா?

முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சேர்ந்தது இந்த ப்ரோக்கோலி. இதில் செலினியம், இரும்பு, நார்ச்சத்து, மாங்க்கனீசு மற்றும் தாமிரம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இதிலுள்ள தன்மைகள் புற்றுநோய் மற்றும் அதன் செல்கள் பரவுவதை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரேகன் பல்கலையின் ஆய்வின் படி, உணவில் சிறிய அளவில் ப்ரோகோலியை சேர்ப்பது கூட புற்றுநோயை தடுக்க உதவுமென என தெரிய வந்துள்ளது.

இதன்படி, ப்ரோக்கோலியின் முளைப்பயிரில் (broccoli sprouts) புற்றுநோயை தடுக்கும் பண்புகள் அதிகம் இருப்பதாகவும், அதற்கு சல்ஃபரோஃபேன் எனும் சேர்மம் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் கூறுகள் இதில் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதுதவிர, மரபியல் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் ஆகியவற்றின் ஆபத்துகளை குறைக்கவும், ஆர்த்ரைட்டிஸ் நோயைத் தடுக்கவும் ப்ரோக்கோலி உதவுகிறது.

வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்கக்கூடும். மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு திசு செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.