மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க இதோ 7 டிரிக்ஸ்

யோகா செய்யவும்... தினமும் குறைந்தப்பட்சமாக 20 நிமிடங்களாவது முறையாக யோகா, தியானம் செய்வது மனதுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். மனம் பக்குவப்படும்.

நேர்மறை எண்ணம் அவசியம்... எதிலும், எப்போதும் பாசிட்டிவ் ஆக நினைத்தால் தான் , எடுத்த செயலில் வெற்றி பெறமுடியும். எதிர்மறையான எண்ணங்கள் உங்களை கோழையாக்கிவிடும்.

பிடித்தமான இசையை கேட்கலாம்... உங்களுக்கு பிடித்தமான மெல்லிய இசையை கேட்கும்போது, டென்ஷனிலிருந்து, விடுபட உதவும். சோர்ந்த மனதை சுறுசுறுப்பாக்கவும் இது உதவுகிறது.

வெளியிடங்களுக்கு செல்லலாமே... அலுவலகம் மற்றும் வீட்டு வேலை என தொடர்ந்து பார்க்கும்போது சலிப்பு உண்டாகும். விடுமுறையன்று அவ்வப்போது வெளியிடங்களுக்கு சென்று ரிலாக்ஸ் செய்யலாம்.

பதற்றம் வேண்டாமே... ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒருசிலர் பலத்த பதற்றமடைவர். அப்போது மனஅழுத்தம் அதிகரிப்பதோடு நினைத்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாத சூழல் உண்டாகும்.

திட்டமிடுதல்... எந்த வேலையையும் செய்யத் துவங்கும் முன், திட்டமிட்டு செய்தால், கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.

உணவில் கவனம்... தினமும் ஆரோக்கியமான உணவுகளை அந்தந்த நேரத்துக்கு உட்கொள்வது மிகவும் அவசியமானது.