இன்று காதலர்களுக்கான பிராமிஸ் டே!

காதலர் வாரத்தின் ஐந்தாம் நாளான பிப்ரவரி 11ஆம் தேதி பிராமிஸ் டே என அழைக்கப்படுகிறது.

காதலர்களுக்கு பிப்., 11 என்பது வெறும் தேதி அல்ல, காதலை உறுதி செய்யும் வாக்குறுதி நாள்.

இது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. 'உன்னை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டேன். இறுதிவரை இணைந்து வாழ்வோம்...' என, காதலர்கள் உறுதிமொழி ஏற்கும் நாள்.

உங்கள் உறவை வலுப்படுத்த காதல் வாக்குறுதிகளைப் பகிர்ந்து கொள்ளுவதுடன், அவர்களுடன் இத்தினத்தில் தரமான நேரத்தை செலவிடலாம்.

காதலர்கள் மட்டுமல்ல காதலை வெளிப்படுத்தும் நபர் கூட தனது காதல் உறவிடம் இந்த உறுதியை அளிக்கலாம்.

காதலர்கள் இதயப்பூர்வமாக உறுதிக் கூறி வாழ்க்கையில் எந்த சிரமமாக இருந்தாலும், அதை சேர்ந்தே எதிர்கொள்வோம் என்பதை உறுதிப்படுத்த பிராமிஸ் டே நினைவூட்டுகிறது.