இருமலை விரட்டும் சித்தரத்தை... இன்னும் பயன்கள் உண்டு!!
சிலருக்கு உடல்சூடு காரணமாகவும் இருமல் தோன்றும். அப்போது சித்தரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து சுவைக்க வேண்டும்; இதுவும், இருமலை போக்கும் சிறந்த மருத்துவம்.
இருமல் ஏற்படும் போது, சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்க வேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை, அப்போது தோன்றி, இருமல் நின்று விடும்.
குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும் போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்க வேண்டும்.
சித்தரத்தை சிறந்த மணமூட்டி. சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும். ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் சீராகும்.
வாகனங்களில் பயணம் செய்யும்போது, வாந்தி ஏற்படும். அந்த தொந்தரவு இருப்பவர்கள் பயணம் செய்யும் போது சிறு துண்டு சித்தரத்தையை, வாயில் இட்டு சுவைத்துக் கொண்டிருந்தால் வாந்தி வராது.
கொழுப்பு சத்தை கரைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. நாக்கு வறட்சியை அறவே நீக்கும்.
சித்தரத்தை, பனங்கற்கண்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து கஷாயம் வைத்து, மூன்று வேளைக்கு தொடர்ந்து உட்கொண்டு வந்தால், வரட்டு இருமல், சளி குணமாகும்.