தூக்கத்துக்கு இடையே எழுப்பிவிட்டால் தலைவலி ஏற்பட காரணம் என்ன?

காலை தூங்கி எழுந்ததும் சிலருக்கு அதீத தலைவலி உண்டாகும். மதியம் குட்டி தூக்கத்தின் போது யாராவது திடீரென பாதியில் எழுப்பிவிட்டால் தலைவலி ஏற்படும். பின் தூங்க முயன்றாலும் போகாது.

தலைவலிக்கு நிறைய காரணங்கள் உள்ளன. எந்த வயதினரை வேண்டுமானாலும் தாக்கும் தலைவலி, நம்மை வேலையில் கவனம் செலுத்தவிடாமல் தடுக்கும்.

நாள்பட்ட நோய் பாதிப்புக்கு மருந்து சாப்பிடுவோர் சிலருக்கு தலைவலி உண்டாகலாம். தூக்கமின்மை காரணமாக தலைவலி ஏற்படலாம்.

கம்ப்யூட்டர் திரையை நீண்டநேரம் பார்ப்பவர்களுக்கு நீல ஒளி கண்களை பாதித்து தலைவலியை உண்டாக்கலாம். இரவு மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு காலை ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

ஸ்லீப் ஆப்னியா எனும் தொண்டைத் தசைகளின் அதீத வளர்ச்சியால் ஏற்படும் சுவாசப் பிரச்னை தூங்கும் நேரத்தில் குறட்டையை உண்டாக்கும்; இரவு முழுவதும் சரியான தூக்கமின்றி, தலைவலி ஏற்படலாம்.

வயதாக ஆக தசைகளில் வலு குறையத் தொடங்கும். மேலும் தூக்கத்தின் அளவு குறைந்து பணிச்சுமை மற்றும் குடும்பப் பிரச்னைகள் அதிகரிக்கும்.

இதனால் வாழ்வில் பொறுப்புகள் அதிகரிக்கும்போது நிம்மதியான தூக்கம் இல்லாமல் போகலாம். இந்நிலையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் குறையும்.

அவ்வாறு ஆழ்ந்த தூக்கம் வரும்போது யாராவது எழுப்பினால் தூக்கம் கலையும். இதனால் வலுவிழந்த தலை நரம்புகளில் 'விண்' என்ற வலி உண்டாகும்.

30 வயதைக் கடந்தவர்கள் முடிந்தவரை ஸ்மார்ட்போனை ஆஃப் செய்துவிட்டு அமைதியாக படுக்கையறையில் தூங்குவது நல்லது. மதுப்பழக்கத்தைக் கைவிட்டு, உடற்பயிற்சி, சுவாசப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் பார்ப்பதை முடிந்தளவு குறைப்பது நல்லது. இவ்வாறு செய்து வர எவ்வித சிகிச்சையுமின்றி தலைவலிப் பிரச்னையை நாமாகவே சரி செய்யலாம்.