பூஜா ஹெக்டேவின் அழகைக் கூட்டும் சிவப்புப் புடவை...!
விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் ஜோடியாக நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கு, இந்தி என பிஸியாக உள்ளார்.
சமீபத்தில், மும்பையில் நடந்த ரன்வீர் சிங்கின் 'சர்க்கஸ்' இந்தி பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பூஜா ஹெக்டே, ஸ்டைலான சிவப்பு நிற புடவையில் வருகை புரிந்தார்.
இந்த லெஹங்கா ரஃபிள் புடவையில், விதவிதமான புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் பூஜா.
புடவைக்கு மேட்சிங்கான சிவப்பு பிளவுஸ், ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட காதணிகள், வளையல்கள், மோதிரங்கள் என ஸ்டைலிஷான, ஹாட் லுக்கில் உள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
பாரம்பரிய உடையில் புதுமையான ஸ்டைலுடன் கூடிய இந்த புடவையை, பிரபல ஆடை வடிவமைப்பாளர் அர்பிதா மேத்தா வடிவமைத்துள்ளார்.