ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்க இதோ சில டிரிக்ஸ்
தொப்பையை குறைக்க உடற்பயிற்சி செய்வது, ஜிம்முக்கு செல்வது என பல வழிகள் இருந்தாலும், பலரும் இதை தவிர்ப்பர். எனவே, வீட்டில் இருந்தபடியே எடையை குறைக்க சில டிரிக்ஸ்...
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறை கலந்து குடிப்பது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பை எரிக்க உதவுகிறது.
உட்கார்ந்து கொண்டே இருக்கும் போது உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கக்கூடும். எனவே, உணவுக்கு பின் நடப்பது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
புரத உணவுகளை உட்கொள்ளும் போது, வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும்; நார்ச்சத்துகள் செரிமானத்தை மேம்படுத்தும் என்பதால் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
மஞ்சள், குருமிளகு, இஞ்சி போன்ற மசாலாப் பொருட்கள் இயற்கையாகவே தொப்பையிலுள்ள கொழுப்பை குறைக்க உதவுவதால், தினசரி உணவிலோ அல்லது தேநீரிலோ சேர்க்கலாம்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பதால் முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
இதற்கு மாற்றாக தண்ணீர், மூலிகை தேநீர் மற்றும் இளநீர் ஆகியவற்றை சேர்க்கலாம்.