45 வயதிற்கு மேல் தலைச் சுற்றினால் ரத்த அழுத்த பிரச்னையா?

தலைச்சுற்றல் அனைத்துமே ரத்த அழுத்தத்திற்கான காரணம் அல்ல. அறியாமையால் அவ்வாறு முடிவு எடுப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

அந்த நேரம் மருத்துவரிடம் சோதனை செய்தாலும் பதட்டம், புதிய சூழலால் ரத்த அழுத்தம் அதிகரித்து காணப்படலாம்.

45 வயதிற்கு மேல் தலைச்சுற்றல் என்பது பொதுவாக எலும்பு தேய்மானத்தினால் வரும் பிரச்னையாகவும் இருக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

சிலருக்கு உள் காதில் நகரும் திரவம் சமநிலை மாறுபாடால் வெர்டிகோவை ஏற்படுத்தி தலைச்சுற்றல் வரலாம். எனவே பிரச்னைக்கான காரணத்தை அறிதல் முக்கியம்.

உடலில் சோடியம், பொட்டாசியம் குறைபாடும், உறக்கமின்மை, உணவு பழக்கங்களும் தலைசுற்றலுக்கு காரணமாகலாம்.

அலைபேசி பயன்பாடு, மாறுபட்ட உணவுகள், உழைப்பின்மை, வெற்றுக் கவலை, ஏமாற்றம், அதீத எதிர்பார்ப்பு போன்ற பிரச்னைகளாலும் தலைச்சுற்றல் அதிக அளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.