புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தும் செயற்கை ரசாயனம் கலந்த உணவுகள்!

தர்பூசணி, பச்சை பட்டாணி போன்ற காய்கனிகள், தந்துாரி போன்ற அசைவ உணவுகளிலும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை ரசாயனம் கலக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக மஞ்சள் நிற ரசாயனமான பிரில்லியன்ட் ப்ளூ, டெட்ராசின் உள்ளிட்ட ரசாயனம் கலக்கப்படுகின்றன.

இந்த ரசாயனம் கலந்ததை உட்கொண்டால், எலும்பு பலவீனம், சக்தி இழப்பு, உடல் சோர்வு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.

பெங்களூரில் பல கடைகளில் இருந்து, சேகரித்த பச்சை பட்டாணிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் செயற்கை ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது

இதனால், ரசாயனம் கலந்த பச்சை பட்டாணியை தடை செய்ய வேண்டும், என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

செயற்கை ரசாயனம் கலந்த உணவுகள் குறித்து பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவற்றை தவிர்ப்பது நம் ஆரோக்கியதிற்கு மிகவும் நல்லது.