புகை உடலுக்கு பகை.. உலக புகை பிடிக்காத தினம்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வார புதன்கிழமை உலக புகை பிடிக்காத தினம் (No Smoking Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

புகையிலை பொருட்களான சிகரெட், சுருட்டு, பீடி ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அர்பணிக்கப்படுகிறது.

இதன் பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 லட்சம் மக்கள் இறப்பதாக ஐ.நா சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரையீரலை பாதுகாக்க இப்பழக்கத்தை தவிர்க்க வேண்டியது முக்கியம். ஒருவர் சிகரெட் பிடிக்கும் போது அதில் உள்ள 90 சதவீத நிகோடினை, அவரது உடல் உட்கிரகித்து கொள்கிறது.

இந்த நிகோடின் தான் அவர்களை தொடர்ந்து சிகரெட் புகைப்பதற்கு தூண்டுகிறது. இதனை தவிர்க்க உங்களுக்கு பிடித்த இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறையும் சிகரெட் குறித்த நினைவு வரும் போதும் அதனை 5 நிமிடம், பிறகு 10 நிமிடம் என தள்ளிப்போட முயற்சி செய்யுங்கள்.

புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் உள்ள நபர்களுக்கு வாய் புற்றுநோயின் அபாயம் 38 சதவீதம் அதிகரிக்கிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மேலும் இப்பழக்கத்தால் அந்த நபருக்கு மட்டுமல்லாமல் அவரைச் சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்பதை கருதி அதிலிருந்து வெளியில் வர கட்டாயம் முயற்சிக்கவும்.