பார்வைத்திறனை மேம்படுத்தும் 7 உலர் பழங்கள்

பாதாமிலுள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சேதத்திலிருந்து கண்களை பாதுகாத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முந்திரிப்பருப்பில் நிறைந்துள்ள துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் விழித்திரை ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.

உலர் திராட்சையிலுள்ள ரெஸ்வெராட்ரோல் ஆக்ஸிஜனேற்றிகள், கண் நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.

உலர் அத்திப்பழங்களில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளன. இவை பார்வைத்திறன் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பிஸ்தாவிலுள்ள லுடீன், ஜீயாக்சாந்தின் போன்ற பண்புகள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நீல ஒளியிலிருந்து பாதுகாக்கின்றன.

ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆரோக்கியமான பார்வைத்திறனை ஊக்குவிக்கும்.

ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த வால்நட்ஸ் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.