சத்தான வெஜிடபிள் மோமோஸ் ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்: மைதா - 2 கப், சோயா சாஸ் - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப
முட்டைக்கோஸ் - 1 கப் கேரட் - 3/4 கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1-2, பூண்டு - 2 பல், இஞ்சி - 1/2 இன்ச் (அனைத்தையும் பொடியாக நறுக்வும்)
செய்முறை : முதலில் மைதா மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி அதில் வெங்காயத்தைப் போட்டு, நிறம் லேசாக மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் கேரட்டை 3 நிமிடமும், பின் முட்டைக்கோஸை சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். அதில் சோயா சாஸ், மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
சிறு உருண்டைகளாக மாவை எடுத்து அதை வட்டமாக தேய்த்து வைக்கவும். அதில் வதக்கி வைத்திருக்கும் காய்கறியை நடுவில் வைத்து நமக்கு பிடித்த வடிவில் மடக்கிக் கொள்ளலாம்.
மடக்கி வைத்திருக்கும் அனைத்து மோமோஸையும் இட்லி தட்டில் வேக வைத்து எடுத்தால் சுவையான வெஜ் மோமோஸ் தயார்.