உடலுக்கு மாங்கனீசு செய்யும் நன்மைகள் அறிவோமா...

மாங்கனீசு என்பது மனிதர்களுக்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசியமான தாது. இது உடலின் பல செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியம்.

குறிப்பாக எலும்பு வளர்ச்சி, கொழுப்பு மற்றும் வளர்சிதை மாற்றம், ரத்த சர்க்கரையை ஒழுங்குமுறை செய்வது என இப்படி பல செயல்களுக்கு அதிகம் உதவும்.

மாதவிடய் நிற்கும் காலத்தில் மாங்கனீசு குறைபாடு எலும்பு முறிவுகளை உண்டாக்கும். ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்பு நோய்களை தடுக்க மாங்கனீசு மிக அவசியம்.

வலுப்பு நோய்க்கு எதிரான குணங்கள் இதில் உள்ளன. மேலும் வலிப்பு தாக்கங்களுக்கு சிகிச்சை அளிக்க மாங்கனீசு சப்ளிமெண்ட்கள் வழங்கப்படுகிறது

வைட்டமின் பி, இ போன்ற அத்தியாவசியமான வைட்டமின்களை உடல் உறிஞ்சுவதற்கு மாங்கனீசு உதவும். குறிப்பாக உணவுகளிலிருந்து உடல் ஊட்டச்சத்தை உறிஞ்ச இது தேவை.

கிராம்பு, குங்குமப்பூ, தவிடு, நட்ஸ், சூரிய காந்தி விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள், எள் விதைகள் உள்ளிட்டவற்றில் அதிகம் உள்ளன.

மேலும் வெண்ணெய், மிளகாய்த்தூள், வறுத்த சோயா பீன்ஸ், கொக்கோபவுடர், டார்க் சாக்லேட் போன்றவற்றை அவ்வபோது உணவில் சேருங்கள்.