தர்பூசணியில் செயற்கை வண்ணம்? எப்படி கண்டுபிடிப்பது?

கோடை வெயில் அதிகரித்து வருவதால், நீர், இளநீர், தர்ப்பூசணி ஆகியவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது.

இதைப் பயன்படுத்தி, பலரும் தரமற்ற குடிநீர், ரசாயனம் கலந்து பழுக்க வைத்த தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்கின்றனர்.

ரசாயனம் கலந்த தர்பூசணியை வெட்டிப்பார்த்தால், வழக்கத்தைவிட அதிக சிகப்பு நிறத்தில் இருக்கும். 'டிஷ்யூ' பேப்பரால் தொட்டுப் பார்க்கும்போது, சிவப்பு நிறம் ஒட்டினால், ரசாயனம் கலந்ததை அறியலாம்.

அதேப்போல், தர்பூசணியை சிறிய துண்டாக வெட்டி, தண்ணீரில் போடவும். தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறதா என பார்க்கவும். மாறினால் ரசாயனம் கலக்கப்பட்டது என அர்த்தம்.

இது, முழுக்க முழுக்க கெமிக்கல் என்பதால், உணவு பொருளாக பயன்படுத்தக்கூடாது.

சுவைக்காக, சர்க்கரைப்பாகுடன் கலந்து ரசாயனம் பூசப்படுகிறது. இதனால் எவ்வித வித்தியாசமும் தெரியாது. இதை சாப்பிட்டால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படும். செறிமானத்தில் பிரச்னை உண்டாவதால் உரிய நேரத்தில் பசி எடுக்காது; சரியான நேரத்தில் சாப்பிட முடியாமல் இரைப்பை பிரச்னைகள் உண்டாகலாம்.

சோர்வு, தாகம் ஏற்படும். சிறுநீரங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.