திருமணத்திற்கு முன்பு செய்யவேண்டிய சரும பராமரிப்பு சில!
திருமணத்திற்கு முன்பு அவகாசம் இருந்தால், ஆறு மாத காலம் சரும பராமரிப்புக்கு அவசியம். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன் துவங்குவது சரியாக இருக்கும்.
குறைந்த நாட்களே அவகாசம் உள்ள சூழலில், புதிதாக ஏதும் கிரீம் பயன்படுத்துவது, தவிர்க்க வேண்டும்.
சருமத்தில் பிக்மென்டேசன், துளைகள், பருக்கள் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் டாக்டரை அணுகி, அதற்கான சிகிச்சை எடுத்த பின்னரே, சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.
ஸ்டிராய்டு பயன்படுத்தப்பட்ட, ஸ்கின் ஒயிட்டனிங் கிரீம்களை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எந்த ஒரு கிரீம்களையும் புதிதாக இணையதளங்களில் பார்த்து, சுயமாக வாங்கி பயன்படுத்த கூடாது. சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கக்கூடும்.
கட்டாயம் சரியான உறக்கம் அவசியம். திருமண நேரங்களில் மன அழுத்தம் இருப்பது இயல்பு. இதனால், துாக்கத்தை கெடுத்துக்கொண்டால், திருமண நாளில் முகம் மலர்ச்சியாக இருக்காது.
கெமிக்கல் பீலிங் சிகிச்சை எடுத்தவர்கள், வீட்டில் உள்ள உருளைகிழங்கு, மஞ்சள், தக்காளி போன்றவற்றையோ, பிற கிரீம்களையோ முகத்தில் பூசுவதை தவிர்க்க வேண்டும்.