இடுப்பு வலி எதனால் ஏற்படுகிறது? தீர்வு என்ன?
ஆண், பெண் இருவருக்கும் இடுப்பு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமே எலும்பு தேய்மானம் தான்.
இடுப்பில் உள்ள டிங்க் ஜவ்வு கிழிதல், ரத்த குறைபாடு ஏற்படுதல், கால்சியம் சத்து குறைபாடு போன்றவை இதற்கான முக்கிய காரணங்களாகும்.
இதில் பெண்களுக்கு கூடுதலான வெள்ளைபடுதல், கர்ப்ப கட்டிகள் இருத்தல் போன்ற காரணங்களாலும் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.
நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது, முதுகெலும்பு
அதிக அழுத்தத்துக்கு ஆளாகிறது. ஒரு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்த
பின் வந்து அமர்வது நல்லது.
குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது, இருக்கையை விட்டு ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம்.
பளு தூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள். தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டியிருந்தால், மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின் தூக்குங்கள்.
உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள். உணவு முறைகளில் குளிர்ந்த உணவு, பானங்களை தவிர்க்கவும். வலி குறையவில்லை என்றால் டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெறலாம்.