குழந்தைகள் சாப்பிட்டவுடன் வயிறு வலித்து மலம் கழிக்க காரணங்கள் அறிவோமா?
இப்போது ஜங்க் புட் ,பாஸ்ட் புட் அதிக அளவில் சிறுவர்கள் உண்கிறார்கள். இதன் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம்.
காய்கறிகள் பழங்களை சரியாக கழுவாமல் சாப்பிடும் போது அதில் இருந்து கிருமிகள் வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. அவற்றை உண்பதற்கு முன் நன்றாக கழுவ வேண்டும்.
வயிற்றில் புழு இருந்தால் அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு வரும். இவை உடலில் சேர வேண்டிய சத்துக்களை சேர விடாமல் தடுத்துவிடும்.
அதனால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை புழு நீக்கல் மாத்திரை சாப்பிட வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாலும் இது போன்ற பாதிப்பு ஏற்படும். அடிக்கடி மலம் கழித்தால் அந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவிய பின்னர் உணவு சாப்பிடவேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டால் இது போன்ற பாதிப்பு ஏற்படாது.