அஞ்சி பின்வாங்குவது இழிவானது... ஹென்றி ஃபோர்டின் தன்னம்பிக்கை வரிகள்
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி, எந்தச் செயலையும் செய்யாமல் பின்வாங்குவது இழிவானது.
உங்களால் ஒரு காரியத்தை முடிக்க முடியும் என்றால் முடியும்; முடியாது என்றால் முடியாது. இதுவே மனதின் அரிய சக்தி.
ஒன்றுக்கும் பயனற்றவர் என்று தள்ளி விடும்படியாக எவரும் இல்லை. சமயம் வரும்போது வேறு ஏதாவது ஒரு வகையில் எவரும் பயன்படக்கூடும்.
பிரியமான வேலை எதுவும் கஷ்டமானதே அல்ல.
ஒரு மனிதன் ஜெயிலிலிருந்து வந்தாலும், கல்லூரியிலிருந்து வந்தாலும் ஒன்றுதான். மனிதனைத் தான் வேலைக்கு அமர்த்துகிறோம். அவன் சரித்திரத்தை அல்ல.
அதிக செலவும், முட்டாள்தனமான சிக்கனமும் தீமையே விளைவிக்கும்.