குழந்தைகளுக்கு அடிக்கடி ஸ்வீட், கேக் கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம்

இன்றைய நாகரிக உலகில் சாக்லேட், துரித உணவுகளை குழந்தைகள் அதிகளவில் உண்பதால், உடல் பருமன் மற்றும் ஆரோக்கிய பிரச்னைகள் அதிகமாகி விட்டன.

அழுதால் சாக்லேட், விளையாட்டில் ஜெயித்தால் சாக்லேட், பிறந்தநாளில் சாக்லேட் என, மகிழ்ச்சி என்றாலே ஸ்வீட் எடுத்து கொண்டாடி வருவது, குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு கேடாகிறது.

இந்த பழக்கம் எதிர்காலத்தில் புற்றுநோயை கூட வரவழைக்கும் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். அதாவது, நம் குழந்தைகளுக்கு நாமே சிறுக சிறுக, விஷம் கொடுக்கிறோம்.

உடல் பருமனான குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மெட்டபாலிக் சிண்ட்ரோம், இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு படிந்த கல்லீரல் போன்ற நோய்கள் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

குழந்தைகளுக்கு 5 வயதுக்குள் தான் சுவை நரம்புகள் வளர்ச்சியடைகின்றன. அப்போது கொடுத்து பழக்கும் உணவு எதுவானாலும், வாழ்நாள் முழுவதும் விரும்பி உண்பார்கள்.

6 மாதத்திற்கு மேல், காய்கறி, கீரைகள், தானிய உணவுகள், சத்தான உணவு முறைகளை பழக்க வேண்டும். பெரியவர்களும் உரிய உணவு முறைக்கு மாறவேண்டியது கட்டாயம்.

தினமும் ஒரு வேளையாவது வீட்டில் தானிய உணவு சமைக்க வேண்டும். சிறு வயது முதல் தவறான உணவு பழக்கங்களுக்கு மத்தியில், வளரும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே, சந்தைகளில் புதிது புதிதாக வரும் வண்ணங்கள் நிறைந்த சாக்லேட், பாக்கெட் தீனிகள், துரித உணவு முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஊக்குவிக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.