ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கிராம்பு

பிரியாணியை மணக்கச் செய்யும் கிராம்பு கசப்பும், காரச்சுவையும் உடையது. சைவம், அசைவம் என எந்த வகை உணவானாலும் சரி இதற்கு தனி இடம் உண்டு.

இதில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

பல் வலியைப் போக்குவதில் கிராம்பு தைலம் பெரிதும் பலனளிக்கிறது. பல் சொத்தையை தடுத்து, வாய் நாற்றத்தை நீக்குகிறது.

சோர்வை போக்கி, வயிற்று பொருமலை நீக்குகிறது. பசியின்மை, அதிக தாகம், வாந்தியை கட்டுப்படுத்துகிறது.

மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக்கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, காது தொடர்பான நோய்கள் மற்றும் சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

வயிற்றுப்புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியாவுக்கு எதிராக, கிராம்பில் யுஜெனால் பண்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கிராம்பு 'ஹெபடைடிஸ்' வைரஸ்களின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிக்கும்.