பெண்களை பாதிக்கும் ஆன்டி பாஸ்போலிபிட் சிண்ட்ரோம்!

ரத்தம் உறையும் தன்மை உடைய ஆன்டி பாஸ்போலிபிட் சிண்ட்ரோம் என்ற ஒரு குறைபாடு தற்போது சில பெண்களை பாதிக்கிறது.

பிளசெண்டா எனப்படும் தாய் -சேய் இணைப்பு திசுவான நஞ்சுக்கொடி வழியாகவே ரத்தம், ஊட்டச்சத்துகள் கருவிற்கு செல்லும்.

இப்பிரச்னை இருந்தால், பிளசெண்டாவில் ரத்தம் உறைந்து விடும்.

தாயிடம் இருந்து சில அணுக்கள் கருவின் இதய ரத்தக் குழாயில் சென்று, கருவிற்கு ரத்தம் செல்வது தடைபடும். இதனால் கருச்சிதைவு ஏற்படலாம்.

குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் போதே, இது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் அதற்கான மருந்துகளை மகப்பேறு டாக்டர்கள் தருவர்.

பாதிப்பு இருப்பவர்களை டாக்டர்களின் கண்காணிப்பில் கருவிற்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்ற முடியும் என கூறப்படுகிறது.