இன்று உலக ஹோமியோபதி தினம்!

மாற்று மருத்துவ முறைகளில் ஒன்று ஹோமியோபதி. இதை கண்டறிந்தவர் ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹனிமன்.

இவரது சாதனையை அங்கீகரிக்கும்விதமாக அவரது பிறந்தநாளான ஏப்.10 உலக ஹோமியோபதி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஹோமியோபதி மருத்துவம் 200 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஹோமியோபதிசெயல்படுகிறது.

இம்முறையில் ஒருவர் எவ்வாறு நோய்வாய்ப்படுகிறார் என்பதை உணவின் வரலாறு, மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த நிகழ்வுகள் மூலம் அறிந்து, மருந்து வழங்கப்படுகிறது.

இம்முறையில் ஒருவர் எவ்வாறு நோய்வாய்ப்படுகிறார் என்பதை உணவின் வரலாறு, மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த நிகழ்வுகள் மூலம் அறிந்து, மருந்து வழங்கப்படுகிறது.

ஒருவரது முழுமையான தனிப்பட்ட வாழ்வியல் மற்றும் நடைமுறைகளை பரிசீலித்து அளிக்கப்படும் மருத்துவமுறை என்பதால், நச்சுத்தன்மையற்றது என கூறப்படுகிறது.