பொதுவாக அபார்ஷன் ஏற்படுவது ஏன்?
முதல் மூன்று மாதங்களுக்குள் நிறைய பெண்களுக்கு அபார்ஷன் (கரு கலைவது) ஏற்படுகிறது.
சிலருக்கு ஆரம்ப காலத்தில் மாதவிடாய் போன்று அவர்களுக்கு தெரியாமலேயே அபார்ஷன் ஆகிறது.
35 நாட்களில் கண்டுபிடிக்காமல் அபார்ஷன் என தெரியாமல் மாதவிடாயாக வெளியேறி விடும். அந்த கரு அசாதாரண கருவாக இருக்கும். இயற்கையாகவே அந்த கரு வளராது.
இரண்டு, மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆவதற்கு நிறைய காரணங்கள் உண்டு.
மரபணு கோளாறு உள்ள கரு, கர்ப்ப பையில் நஞ்சுக்கொடி பலமாக இல்லாமல் இருப்பதால் ரத்தப்போக்கு ஏற்படுவது போன்ற காரணங்களால் அபார்ஷன் ஏற்படும்.
கர்ப்பபை வாய் பலமில்லாமல் இருந்தால் 4வது, 5வது மாதத்தில் கூட அபார்ஷன் ஏற்படும்.