பார்க்கின்சன்ஸ் பிரச்னை வராமல் காப்பது எப்படி?
டோபமைன் என்ற வேதிப்பொருளை போதுமான அளவு நரம்பு செல்கள் சுரக்காதது தான் பார்க்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படும் நடுக்கு வாத நோய்க்கு காரணம்.
பொதுவாக, 60 வயதிற்கு மேல் வாதம் அதிகரிப்பதாலே பார்க்கின்சன்ஸ் போன்று நரம்பு மண்டலம் மற்றும் எலும்பு, மூட்டு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன.
இளம் வயதில் பார்க்கின்சன்ஸ் நோய் வந்தால், குணப்படுத்துவது எளிது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
துரித, பதப்படுத்திய, அதிக மசாலா கலந்த உணவுகள் சாப்பிடுவது, அதிகம் மதுப் பழக்கம் இருப்பவர்களுக்கு நரம்பு மண்டலம் செயலிழக்கும் வாதம் குறையாது.
அதனால் அவற்றை தவிர்த்து பால், மோர், பழங்கள் என்று வாயுவை கட்டுப்பாட்டில் வைக்கும் உணவுகளை சாப்பிட்டால், எளிதாக சமாளிக்கலாம்.
பார்லி தவிர மற்ற சிறுதானியங்களை அதிகமாக உணவில் சேர்ப்பது கூடாது என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர்.
கொழுப்பு அதிகரிக்கும் என்ற அச்சத்தில் நெய், தேங்காய் எண்ணெய் தவிர்க்கிறோம். இது வறட்சியை அதிகரித்து, நோயின் தன்மையை தீவிரப்படுத்தலாம்.
வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் குளியல், சரியான அளவில் துாக்கம் உட்பட வாழ்வியல் மாற்றம் மிகவும் அவசியம்.