ஐந்து நிமிட உடற்பயிற்சியால் என்ன நடக்கும்?

இன்றைய பரபரப்பான நாகரிக உலகில் காலை வேளையில் அரக்க பறக்க பள்ளி, கல்லூரி, அலுவலகத்துக்கு கிளம்பும் பலருக்கும் உடற்பயிற்சியை நினைக்கவே நேரமிருப்பதில்லை.

ஆனால், இன்றைய சூழலில் நடைபயிற்சி, சைக்கிளிங், நீச்சல் உட்பட ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் வீதம் தினமும் உடற்பயிற்சி செய்வது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என ஆஸ்திரேலியாவின் எடித் கோவான் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இதன்படி வீட்டிலேயே நாற்காலியில் அமர்ந்த நிலையில் சில அசைவுகள், 'புஷ்-அப்' உள்ளிட்ட சில உடற்பயிற்சியில் ஈடுபடுடலாம்.

இதனால், தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை முன்னேற்றங்களுக்கு இது வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர், 10 நிமிட நடையில், 1 கி.மீ., தூரம் நடக்கலாம். ஆனால், இது ஒவ்வொருவரின் உடல் நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகியவற்றினால் மாறும்.