ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு !

பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று (ஜனவரி 02) அதிகாலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

மதுரை கள்ளழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு சுந்தர்ராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி சொர்க்கவாசலில் வெளி வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

காரமடை அரங்கநாதர் கோயிலில், இன்று அதிகாலை 5:45 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பூர், அவிநாசி வட்டம், கருவலூரில் 700 ஆண்டுகள் பழமையான கருணாகர வெங்கட்ரமணா பெருமாள் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்.

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், சீதாதேவி பாதபூஜை செய்ய, லக்ஷ்மணர் குடை பிடிக்க, ஆஞ்சநேயர் சாமரம் வீச, ஸ்ரீராமர் ஆசிர்வதிக்கும் திருக்காட்சி அலங்காரம் நடந்தது.