தினமும் எவ்வளவு காபி குடிப்பது ஆரோக்கியமானது?

சரியான நேரத்தில், மிதமான அளவு குடிக்கும் காபி இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

காபியில் உள்ள கேபின் என்ற இயற்கையான வேதிப்பொருள் குறித்து, இரு வேறு ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. அதிகப்படியான கேபின் நல்லதல்ல என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், மிதமான அளவு காபி குடிப்பது, இதய நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தை குறைக்கிறது என்று, அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் கிளினிக் வெளியிட்ட சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று கப் காபி குடிக்கலாம். 200 - 400 மி.கி., கேபின் எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது.

குறிப்பாக காலையில் காபி குடிப்பது இதயத்துக்கு நன்மை செய்யும். அதே நேரம் சமச்சீரான, உணவு முறையான உடற்பயிற்சி, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதும் இதயத்திற்கு முக்கியம்.

இதைவிட அதிகமாக காபி குடிப்பது, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பு, 'அரித்மியா' எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பு, துாக்க கலக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.