ஹேர்பின் வளைவுகளுடன் இந்தியாவில் 7 சிலிர்ப்பூட்டும் சாலை பயணங்கள்
தமிழகத்தில் பசுமையான காடுகள், பள்ளத்தாக்குகளுடன்
செங்குத்தான, வளைந்த ரோடு என 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் உள்ள கொல்லி மலை,
சிலிர்ப்பூட்டும், அழகிய பயணங்களில் ஒன்றாகும்.
கேரளாவில் தாமரச்சேரி சுரம் ( வயநாடு காட் பாஸ்) 9 கொண்டை ஊசி வளைவுகளை மட்டுமே கொண்டிருந்தாலும், அடர்ந்த மழைக்காடுகள், மசாலா தோட்டங்கள் வழியாக பெரியளவில் விரிந்துள்ளன.
மகாராஷ்டிராவில் 10 கி.மீ., தூரமுள்ள மாத்தேரான் - நேரல் சாலைப் பயணம் உற்சாகத்தை அள்ளித்தரும். பைக் ரைடிங் செல்பவர்களுக்கு இது பிடித்தமான பயணமாகும்.
மசினகுடியிலிருந்து ஊட்டிக்கு கல்ஹட்டி வழியாக செல்லும் மாற்றுப் பாதை மிகவும் செங்குத்தானது. இங்குள்ள 36 கூர்மையான வளைவுகள், சாலைப் பயண ஆர்வலர்களுக்கு ஏற்றதாகும்.
கலிம்பொங் - ஜூலுக், சிக்கிம்... 32 கொண்டை ஊசி வளைவுகளுடன் உள்ள இந்த 'ஜிக் ஜாக்' ரோடு சிலிர்ப்பான அனுபவத்தை தரும். அதிக உயரத்தில் உள்ளதால் கவனம் தேவை.
தமிழகத்தில் ஆனைமலை மலைகள் வழியாக 40 கொண்டை ஊசி வளைவுகளுடன் வால்பாறை - பொள்ளாச்சி பயணம் பசுமையான தேயிலை தோட்டங்கள், மூடுபனி மலைகள் என மெய் சிலிர்க்கலாம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் ரோஹ்தாங் கணவாய் செல்லும் ரோடு, அதிக உயரம், இமயமலையின் அழகிய பின்னணியில் வெகுவாக கவர்கிறது. பனியை பொறுத்து மே - நவம்பர் வரை மட்டுமே திறந்திருக்கும்.