நிலாவாரையின் ஆரோக்கிய நன்மைகள் இவை

முன்பு நம் முன்னோர்கள் பெரும்பாலும் மூலிகைகளை பயன்படுத்தியே உடல் நலத்தை பாதுகாத்தனர்.

இதில் ஒன்றான நிலாவாரையின் இலைகள் கசப்பாக இருப்பினும், மருத்துவ பயன்கள் நிறைந்தவை. குறிப்பாக உடல் பருமனை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

நிலாவாரை இலையுடன் சிறிது வெந்தயக்கீரை, ஓமம் சேர்த்து அரைத்து உறங்கும் முன் சாப்பிட, வாயு தொல்லை, செரிமானம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இதன் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர, உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

இதன் இலையை அரைத்து, வாரந்தோறும் ஹேர் பேக் ஆக பயன்படுத்தி வர, இளநரைக்கு குட் பை சொல்லலாம். கூந்தல் உதிர்வை தடுத்து, வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

வெதுவெதுப்பான நீரில் நிலாவாரை பொடி, சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வர மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்.

சிறிது நிலாவரை பொடியை பாலில் கலந்து சுண்டக்காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து இரவில் தூங்கும் முன்பு குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்.

சித்த மருத்துவர்கள் அல்லது நிபுணர்களின் ஆலோசணைபடி இதை பயன்படுத்த வேண்டும்.