இன்று சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்

பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது.

பல்லுயிரிகள் இருந்தால் தான், சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து உள்ளோம்.

பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'நிலையான வளர்ச்சி, இயற்கையுடன் நல்லிணக்கம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

17ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பிறகு, பூமி பெரிய அழிவுகளை சந்தித்து வருகிறது.

நீர், நிலத்தில் வாழும் உயிரின வகைகளின் தொகுப்பு தான் 'பல்லுயிர் பரவல்'. பூமியில் 10 லட்சம் விலங்குகள், தாவர இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.

எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்தால் தான், எதிர்கால உலகம் வாழத் தகுதியாக இருக்கும்.