ரணத்தை போக்கும் ரணகள்ளி! நன்மைகள் அறிவோமா...

சிறுநீரக கற்களை இயற்கையாக வெளியேற்றவும், மஞ்சள் காமாலையின் தீவிரத்தை படிப்படியாக குறைக்கவும் பயன்படக்கூடிய முக்கியமான மூலிகை ரணகள்ளி செடி.

இந்த செடியின் ஒரு இலையை மட்டும் எடுத்து நன்கு சுத்தம் செய்து, காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்கி விட வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு இலை தான் சாப்பிட வேண்டும். அதன்பின் அரை கிளாஸ் வெந்நீர் குடிக்க வேண்டும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரு இலை வீதம் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கல் இயல்பாக சிறுநீரில் வெளியேறி விடும்.

இதில் டயுரட்டிக் தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியை குறைக்கவும் இது உதவும். சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுகளையும் குணப்படுத்தும்.

மைக்ரேன் உட்பட எந்தவிதமான தலைவலியாக இருந்தாலும், ரணகள்ளி இலைகளை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து அரைத்து பற்று போடலாம்.