இன்று உலக தைராய்டு தினம்!
உலகில் 20 கோடி பேர் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. இது கழுத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்திருக்கும். உடலின் வளர்சிதை மாற்றங்களை தைராய்டு சுரப்பி கட்டுப்படுத்துகிறது.
இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 25ல் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள் "ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்துங்கள்" என்பதாகும்.
உடலில் ஏற்படும் வளர்சிறை மாற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இது உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை, இதயம் போன்றவை இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது.