இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம்

உலகில் போர், வன்முறை உள்ளிட்ட ஆபத்தான சூழல்களில் அமைதியை நிலை நாட்ட ஐ.நா., அமைதிப்படை 1945ல் உருவாக்கப்பட்டது.

இதில் இந்தியா உட்பட 120 நாடுகளை சேர்ந்த 60 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களது சேவையை அங்கீகரிக்கும் விதமாக மே 29ல் ஐ.நா., அமைதிப் படைக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'அமைதிப்பணியின் எதிர்காலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

80 ஆண்டுகளில் 20 லட்சம் வீரர்கள் இப்படையில் பணியாற்றி உள்ளனர். இதில் 4400 வீரர்கள் பலியாகினர்.

இந்த நாளில் அமைதி காப்போர் பணியில் தங்கள் பங்களிப்பைத் தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது