குழந்தைகள் விரும்பும் சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு! ரெசிபி இதோ

குழந்தைகள் இனிப்பு வகைகளை விரும்புவதற்கு ஏற்க, ஆரோக்கியம் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு தயாரித்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள் : சர்க்கரை வள்ளி கிழங்கு - அரை கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், நாட்டு சர்க்கரை - அரை கப்

செய்முறை :முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக சுத்தம் செய்து, குக்கரில் தண்ணீர் ஊற்றி, முழுமையாக வேக வைக்கவும்.

ஆரிய உடன் சர்க்கரை வள்ளி கிழங்கின் தோலை அகற்றி, நன்கு பிசைந்து, அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து, நன்றாக கிளறவும்.

ஒரு தட்டில் தேங்காய் துருவலை பரப்பி வைக்கவும்.

நாம் பிசைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை, சிறிய உருண்டைகளாக செய்து, தேங்காய் துருவலில் புரட்டி எடுங்கள்.

தயாரித்த லட்டுகளை குறைந்தது அரை மணி நேரம் பிரிஜ்ஜில் வைத்து குளிர்விக்கவும். லட்டு சுவைக்க ரெடி...