பிஸ்தா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...
பிஸ்தா பாலில் எக்கச்சக்கமான ஆரோக்கிய பலன்களும் உண்டு. இதை சாப்பிட்டால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?
பிஸ்தாவில் பொட்டாசியம், நல்ல கொழுப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்டிராலை எதிர்த்துப் போராடும் ஃபைடோஸ்டிரோல் உள்ளிட்டவை அதிகம் நிறைந்தது.
பிஸ்தா விதைகள் ஐஸ்கிரீம், மில்க் ஷேக் மட்டுமின்றி பால் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பாதாம் பாலுக்கு இணையாக பிஸ்தா பால் பல இடங்களில் பிரபலமானது.
பிஸ்தா விதைகளை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் நிரப்பிய தண்ணீரில் ஊறவைத்து, காலை தோல் அகற்ற வேண்டும்.
பின்னர் பிஸ்தாவை பிளண்டர் அல்லது மிக்ஸியில் மையாக அரைத்து வடிகட்டினால் வருவதுதான் பிஸ்தா பால்.
இதில் சுவை சேர்க்க மேப்பல் ஹனி, நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாம். பிஸ்தா பாலில் சிறிதளவு சீஸ் சேர்க்கலாம். இதனை ஃபிரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள்வரை பருகலாம்.