நரம்புகளுக்கு பலம் தரும் பாதாம் பால்! நன்மைகள் அறிவோமா!

பாதாமில் பாஸ்பரஸ், தாது உப்பு, குளுட்டாமிக் அமிலம் இருப்பதால், நினைவாற்றலை அதிகரித்து, நரம்புகளைப் பலப்படுத்தும்.

ரத்தத்துக்கு நன்மை செய்யும், எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறையவும், தினமும் பாதாம் பருப்பை உட்கொள்ள வேண்டும்.

பாதாம் பருப்பை, குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். நன்றாக மென்று விழுங்கும் போது, எளிதில் ஜீரணமாகும். பாதாம்

பாதாமிலிருந்து எடுக்கப்படும் பால் நரம்புகளுக்கு பலம் தரும். வயிறு, சிறுநீரகப் பாதை, நுரையீரலுக்கு நல்லது. ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில், இது ஒரு முக்கியமான டானிக்.

ஆண்மைக் குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக இவை பயன்படுகின்றது.

பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால், மற்ற பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.