மாத்திரைகள் பயன்படுத்தாமல் மலச்சிக்கல் சரியாக சில டிப்ஸ்!
நமது உணவுமுறைகளின் மூலம் மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம். நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத்தானிய உணவுகள் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.
வாழைத்தண்டு, கேரட், முட்டைகோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரைக்காய், போன்ற காய்கறிகள், கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகளை உண்ணவும்.
கீரை வகைகள் மற்றும் ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, வாழைப்பழம், மாம்பழங்களில் நார்ச்சத்து அதிகம்.
மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மிளகு ரசம், கொத்துமல்லி சட்னியை உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.
தினமும் 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதலை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பால், பால் தொடர்பான உணவுகளையும் காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதையும் குறைத்து கொள்வது நல்லது.
நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காரக்கூடாது. தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை தொடரலாம்.