புதிய டிஜிட்டல் தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 'கற்றார்' (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்பார்ம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இசை மற்றும் பிற கலைகளுக்கான முக்கியமான தளம் இது. குறிப்பாக தனி இசைக்கலைஞர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.
இதில் கலைஞர்கள் நேரடியாக பங்கேற்று தங்கள் படைப்புகளை பட்டியிலிட்டு பணமாக்கலாம். புதிய திறமையான கலைஞர்களுக்கு பாலமாக அமையும்; எதிர்காலத்துக்கான தளமாகவும் இது இருக்கும்.
புதிய ஐடியாக்களை வைத்திருக்கும் கலைஞர்கள் அதை உலகுக்கு அறிமுகப்படுத்த இத்தளத்தை பயன்படுத்தலாம். புதிய ஐடியாக்கள், கிரியேட்டிவிட்டியால் தான் உலகம் மாறுகிறது எனக் கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மேலும், தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை இதில் வெளியிட்டுள்ளார். சர்வதேச டிஜிட்டல் தளத்திற்கு 'கற்றார்' என தமிழில் பெயரிட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.