இன்று சர்வதேச விளையாட்டு தினம்
உலகில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு உரிமையை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 11ல் உலக விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது
விளையாட்டு மகிழ்ச்சியை தருகிறது என உலகின் 71 சதவீத குழந்தைகள் தெரிவிக்கின்றனர்.
விளையாட்டு மூலமே குழந்தைகள் சிறப்பாக கற்றுக்கொள்கின்றனர்.
கற்பனை, சிந்தனை திறன், தலைமைப்பண்பு, சவால்களை எதிர்கொள்ளும் திறன் வளர, விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பாக உள்ளது.
'விளையாட்டை தேர்ந்தெடு; ஒவ்வொரு நாளும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
இந்த தினம் விளையாட்டின் மூலம் மனிதர்களின் உடல், மன மற்றும் சமூக வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும் மக்கள் இடையே நல்லுறவு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை வளர்க்க உதவும்