சர்வதேச யோகா தினம் இன்று !
யோகா என்பது, உடலையும் மனதையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் விஞ்ஞான ரீதியிலான ஒரு கலையாகும்.
தினமும் யோகாசனம் செய்தால் உடலும், மனதும் இளமையாகவே இருக்கும்.
பெரும்பாலான யோகா பயிற்சிகள் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. தேவைக்கு ஏற்ப சீராக வளையும் தன்மையுடன் உடலை வைத்திருக்க உதவுகிறது.
இதன் ரிலாக்சேஷன் நுட்பங்கள், ரத்த அழுத்தத்தை குறைக்கும். ஜீரண மண்டலம், நாளமில்லா சுரப்பிகள், இனப்பெருக்க உறுப்புகளுக்கு நேர்மறையான அதிர்வை தருகிறது.
மொத்தத்தில், தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதால், நேர்மறையான எண்ணமும், தன்னம்பிக்கையும் வருகிறது.
இதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜூன் 21ல் உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2014ல் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஐ.நா., சபை இத்தினத்தை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.
'ஒரு பூமி மற்றும் ஒரு ஆரோக்கியத்துக்கான யோகா' என்பது இந்தாண்டின் மையக்கருத்து. இது மனித வாழ்க்கை - உலக ஆரோக்கியத்தின் தொடர்பை பிரதிபலிக்கிறது.