வீட்டிலேயே செய்யலாம் எக் பேஜோ.. ரெசிபி இதோ!

சாலையோரங்களில் விற்கப்படும் பர்மா உணவான எக் பேஜோவை, வீட்டில் எப்படி செய்து சாப்பிடலாம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

முதலில் ஐந்து முட்டைகளை நன்கு வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, காய்ந்த பின், காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம், பூண்டு அனைத்தையும் தனித்தனியாக சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து கொள்ளவும்.

காய்ந்த மிளகாயை மிக்சியில் போட்டு, கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாயை சேர்த்து பிசையவும். இதில், மிக்சியில் அரைத்து வைத்த மிளகாயையும் சேர்த்து கொள்ளவும்.

பின், எலுமிச்சை பழத்தை சாறாக பிழிந்து ஒரு கப்பிலும், புளி தண்ணீரை ஒரு கப்பிலும், வதக்க பயன்படுத்திய எண்ணெயை ஒரு கப்பிலும் எடுத்து வைத்து கொள்ளவும்.

இதன்பின், முட்டையை இரண்டாக கீறி, அதில் பிசைந்து வைத்த கலவையை நடுவே வைக்கவும்.

இதில், எலுமிச்சை சாறு, புளி தண்ணீர், எண்ணெய் ஆகியவற்றை லேசாக ஊற்றவும்.

பின்னர், கொத்தமல்லி இலையை வைக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான மற்றும் சூப்பரான 'எக் பேஜோ' தயார்.